பக்கம் எண் :

4296.

     ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
     விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
     விக்கல் வராதுகண் டாய்.

உரை:

     திருவருள் ஞானமாகிய அமுதத்தைப் பொருந்தி நுகர்கின்றோமாதலால், இனி நமக்குத் தடை யாதும் இல்லையாம் என்பது குறிப்பு. விக்கல் - விக்குதல்; தடுத்தல் என்பது பொருள்.

     (10)