பக்கம் எண் :

4298.

     வஞ்சமி லார் நாம் வருந்திடில் அப்போதே
     அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     வஞ்சமிலார் - வஞ்சிக்கும் குற்றம் இல்லாத சிவ பெருமான். அச்சம் - செய்பவர் செய்வினையின் தூய்மையைக் கெடுக்குமாதலால், “அஞ்சேல் என்பார்” எனவுரைக்கின்றார். வஞ்சமில்லாத சிவபெருமான் அம்பலத்தில் இருக்கின்றார்; அவர் நாம் வருந்தும்போது அஞ்சவேண்டா என ஆதரிப்பார் என்பது கருத்து.

     (2)