பக்கம் எண் :

4322.

     தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
          தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
     வாரா வரவாகி வந்தபொற் பாதம்
          வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய

உரை:

     “இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு” (குறள்) எனப் பெரியோர் கூறுதலால், “தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்” என்று சிறப்பிக்கின்றார். தன்னைச் செய்தவன் செய்வினைப் பயனை நுகர்ந்து கழியுமளவும் அவனை நீங்காத வன்மையுடையதாதலால் “வல்வினை” என மொழிகின்றார். வாரா வரவு - பிறர் அறிய வாராத வரவு. வசியாத பாதம் - தங்குதல் இல்லாத திருவடி.

     (2)