4336. நாரண னாதியா நாடரும் பாதம்
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். ஆடிய
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதமன் றாடிய பாதம்.
உரை: நாரணனாதியர் - திருமால் முதலிய தேவதேவர்கள். நாடரும் பாதம் - நாடியடைதற் கரிய திருவடி. ஆரணம் - இருக்கு முதலிய வேதங்கள். ஆசை விட்டவர் - ஐம்புலன்கள் மேற் செல்லும் ஆசையை விட்டவர்; முற்றத் துறந்த முனிவரர்கள். (16)
|