4348. எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்
உரை: புண்ணியமான தவத்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்துமென்பது பற்றி, “எண்ணிய எண்ணங்கள் எல்லாம் முடிக்கும் புண்ணியனார்” என்று சிவனைப் புகழ்கின்றார். போது - தாமரைப் பூப்போலும் பாதம். (12)
|