பக்கம் எண் :

கண

கண்ணிகள்

4354.

          அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவ ரேதிரு
          அம்பல வாணரே வாரீர்
          அன்புடை யாளரே வாரீர். வாரீர்

உரை:

     அருட் பெருஞ்சோதி ஆண்டவர் - திருவருள் ஞானமாகிய சிவவொளியை ஆன்மாக்கட்கு நல்கி இன்பவாழ்வு தந்து ஆண்டருளுபவர். ஆண்டருளும் பெருமானுக்கும் தமக்குமுள்ள தொடர்பு தோற்றுவித்தற்கு, “என் ஆண்டவர்” என இயம்புகின்றார். அம்பலவாணர் - அம்பலத்தில் வாழ்பவர். வாழ்நர் என்பது வாணர் என மருவிற்று.

     (2)