4355. அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
அந்தண ரேஇங்கு வாரீர்
அம்பலத் தையரே வாரீர். வாரீர்
உரை: அச்சம், திருவருள் ஞானம் தமக்கு எய்தலாகுமோ என அஞ்சி யமைந்த தமக்கு அதனை இனிது நல்கி இன்புறுத்தினமை விளங்க, “அச்சம் தவிர்த்தென்னை யாட்கொண்டருளிய அந்தணர்” எனப் புகழ்கின்றார். அந்தணர் - செந்தன்மையே யுருவாகியவர். ஐயர் - தலைவர். (3)
|