4356. அன்புரு வானவர் இன்புற உள்ளே
அறிவுரு வாயினீர் வாரீர்
அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
உரை: அன்பும் அறிவும் தமக்கு உருவாகக் கொண்டவராதலின் சிவனை, “அன்புருவானவர்” எனவும், “அறிவுருவாயினீர்” எனவும் இயம்புகின்றார். அறிவுருவாய் உள்ளத்தில் நின்று இன்பம் பெருகுவித்தல் பற்றி, “இன்புற உள்ளே அறிவுருவாயினீர்” என விளம்புகின்றார். (4)
|