பக்கம் எண் :

4360.

          அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
          அன்பருக் கன்பரே வாரீர்
          இன்பம் தரஇங்கு வாரீர். வாரீர்

உரை:

     அப்பணி பொன்முடி - கங்கையாறு தங்குகிற பொன்னிறச் சடைமுடி. மெய்யன்பர் - மெய்ஞ்ஞானிகள். அன்பு - ஈண்டு ஞானம் குறித்து நின்றது. “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானமுண்டார்” எனச் சேக்கிழார் பெருமான் உரைப்பது காண்க.

     (8)