பக்கம் எண் :

4364.

          ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
          அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
          ஆனந்த நாடரே வாரீர். வாரீர்

உரை:

     ஆரணம் - வேதம். உடல் கருவியுலகுகளைப் படைத்தலால் ஆதியென்றும், சிவமாகிய தன்னைப் படைப்போர் இல்லாமையால் அனாதி என்றும் வேதங்கள் ஓதுகின்றன என அறிக. காண்டற் கருமையும் பெருமையும் உடையதாகலின் திருவருள் ஒளியை, “அரும்பெரும் சோதி” என்று கூறுகின்றார். ஆனந்த நாடர், பேரின்பம் நிலவும் முத்தி வீட்டையுடையவர்.

     (12)