பக்கம் எண் :

4369.

          ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்து
          அமுதம் அளித்தீரே வாரீர்
          ஆடிய பாதரே வாரீர். வாரீர்

உரை:

     மலபோக மயக்கத்தால், கலக்கமுறும் ஆன்ம அறிவை நன்னெறியுணர்த்தித் தெளிவு பெறுவித்தல். அமுதம் - உண்மை ஞானம்.

     (17)