4469. என்னுயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
என்னுடைஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
என்னுரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
என்னொருமைச் சற்குருவே ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
உரை: என்பு - ஈண்டுத் தேகத்தின் மேற்று. உரிமைத்தாய் - பெற்ற நற்றாய். ஒருமைச் சற்குரு - மனக் கோட்டமில்லாத உண்மை யுரைக்கும் ஆசிரியர். (11)
|