பக்கம் எண் :

72. அம்பலவாணர் அணைய வருகை

சிந்து

    அஃதாவது, தில்லையம்பலவாணராகிய நடராசப் பெருமானைத் தன்பால் வந்தருளிக் கூடியின்பம் தருமாறு தலைவி வேண்டுதல். வேட்கை மிகுதியால் உடம்பும் உயிரும் வாடியபோதும் தலைவி தானே தலைவன்பாற் சென்று சேர்வது மரபன்மையால் இப்பாட்டின்கண் தலைவனைத் தன்பால் வந்து அணையுமாறு தலைவி வேண்டுகிறாள் என அறிக.

பல்லவி

4470.

     அணையவா ரீர் என்னை அணையவா ரீர்
     அணிவளர் சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.

உரை:

     அணைதல் - கூடுதல். அணிவளர் சிற்றம்பலத்தீர் அழகு மிகும் சிற்றம்பலத்தை யுடையவரே.