4481. கலந்துகொள வேண்டுகிறேன் அணையவா ரீர்
காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
புணர்வதற்குத் தருணமிேத அணையவா ரீர்
அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
இலந்தைநறுங் கனியனையீர் அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
அணிவளர்சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
உரை: புலத்தல் - பிணங்குதல். புணர்வது - கூடுதல். அலந்த விடம் - துன்ப மிக்கு வருந்துமிடம். தரியேன் - உயிர் தரிக்க மாட்டேன். இலந்தை நறுங் கனி - இலந்தையின் இனிய பழம். (11)
|