73. வருவார் அழைத்து வாடி
சிந்து
அஃதாவது, சிவன்பால் தன் தோழியைத் தூய வேண்டிய தலைவிக்கு அவள், வருவாரோ என ஐயுற்ற, தோழியை நோக்கி, சென்றழைத்தால் வாராதொழியார் என வற்புறுத்துவதாம்.
பல்லவி 4482. வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம் நல்ல வரமே.
உரை: வா ஏடி என்பது வாடி யென மருவிற்று. வடலூர் வடதிசை - வடலூரில் வடதிசையில் உள்ள ஞான சபை. அவரை அழைத்துவந்தால் பெறும் பயன் இது என்பாளாய், “வந்தால் பெறலாம் நல்ல வரமே” என மொழிகின்றாள். (1)
|