பக்கம் எண் :

74. என்ன புண்ணியம் செய்தேனோ

சிந்து

    அஃதாவது, காதலராகிய அம்பலவாணரது வருகை யறிந்து தலைவி உவகை மேலிட்டு நற்றாய்க்கு உரைப்பதாம்.

பல்லவி

4487.

     என்ன புண்ணியம் செய்ே­த னோ - அம் மாநான்
          என்ன புண்ணியம் செய்ே­த னோ.

உரை:

     புண்ணியம் - சிவ புண்ணியம்; பதி புண்ணியம் எனவும் வழங்கும்.

     (1)