4492. ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
ஆதியந்தம் காண்பரிய ஜோதிகயஞ் ஜோதிஉன்னோ
டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே.என்ன
உரை: ஓதுதல் - வேதங்களைக் கற்று ஓதுதல். வேதியன் - பிரமன். ஓங்கார பஞ்சகம் - ஓங்காரப் பொருளாகும் திருவைந் தெழுத்து. சுயஞ்சோதி - தானே தனக்கு முதலாக வுள்ள அருளொளி. (6)
|