4495. பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ.
உரை: பாகார் மொழி - வெல்லப் பாகு போல் இனிக்கும் சொற்களைப் பேசுபவள். பார்த்து ஆடல் - காணும் மகிழ்ச்சியால் ஆடுதல். வாகு - அழகு. வலிய நாதம் - குறையாத மங்கல இசை. (9)
|