பக்கம் எண் :

4508.

     சாதிமதம் சமயமுதற் சங்கற்ப
          விகற்பம்எலாம் தவிர்ந்து போக
     ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி
          எனக்களித்தான் அந்தோ அந்தோ.

உரை:

     சாதி சமய மதங்களின் பேரால் நமது பாரத நாட்டு மக்கள் விருப்பு வெறுப்புற்று வீற்று வீற்றாகிக் கெடாமை குறித்தே இறைவன் அம்பலத்தில் ஆடுகின்றான் என்பது கருத்து. மதம் - கொள்கை. சமயங்களின் உட்கூற்றுக் கொள்கைகள் மதம் என அறிக. சங்கற்பம் - விழைவு. விகற்பம் - வேறுபாடு.

     (2)