பக்கம் எண் :

4525.

     ஆதி அனாதி மருந்து - திரு
          அம்பலத் ே­தநட மாடு மருந்து
     ஜோதி மயமா மருந்து - என்னைச்
          சோதியா தாண்டா துரிய மருந்து. ஞான

உரை:

     ஆதி அனாதி மருந்து - ஆதியும் அனாதியுமாகிய மருந்து. சோதி மயம் - ஒளிமயம். சோதியாது - சோதனைக்குள்ளாக்காமல். துரிய மருந்து - துரிய நிலையிற் காணப்படும் மருந்து.

     (8)