4554. சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - என்னை
ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி. சிவசிவ
உரை: சித்துருவாம் சுயஞ்சோதி - ஞானமே திருவாகிய தனிப் பெருஞ்சோதி. அத்துவிதானந்த சோதி - சீவன்கள் யாவும் அத்து விதக் கலப்புற்று இன்புறுவிக்கும் அருட்சோதிப்பொருள். சிற்றம்பல சோதி - திருச்சிற்றம்பலத்தில் விளங்குகிற சோதி. (3)
|