பக்கம் எண் :

80. சோதியுட் சோதி

சிந்து

    அஃதாவது, சூரியன், சந்திரன், நாள்கள், கோள்கள், தீ எனவுலகில் உள்ள ஒளிப் பொருள்களின் உள்ளும் புறமும் கலந்தொளிரும் ஒளிகட்கெல்லாம் காரண வுள்ளொளியாய்த் திகழ்வது சிவம் என்பது விளக்குதலாம்.

பல்லவி

4585.

     ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
          ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
     ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.

உரை:

     சோதியுள் சோதியுள் சோதி, தூலமும் சூக்குமமாய் உலகில் நிலவும் ஒளிப் பொருள்கள் அனைத்துக்கும் காரண உள்ளொளி; அந்த உள்ளொளி தூய சிவத்தின் ஒளியாம் என்பது. சிவசோதி - சுத்த சோதியும் உட்சோதியுமாம் என வற்புறுத்துவது கருத்தென அறிக.     

     (1)