பக்கம் எண் :

4602.

     பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
          பிரம வெளியினில் பேரரு ளாலே
     சித்தாடு கின்றது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     பித்தாடும் மாயை - மதி மயங்கித் திரியப் பண்ணும் உலகியல் மாயை. சுத்தப் பிரமவெளி - மயக்க வுணர்வுகட்கிடமில்லாத தூய பரசிவ வெளி. எல்லா வெளிகளையும் தனக்குள் அடக்கித் தன்னிற் பெருவெளி வேறெயில்லாதது என்றற்குச் சிவவெளி, “சுத்தப் பிரமவெளி” யெனப்படுகிறது. பிரமம் - பெரியது. சித்தாடுதல், ஞானத் திருக்கூத்தாடுதல்.

     (18)