4608. பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: உழன்றேன் - வருந்தினேன். தம்முடைய பிறப்பிறப்புக்களைத் தவிர்த்தமை புலப்படுத்தற்கு, “பிறவாது இறவாப் பெருமை தந்து” என்றும், தமது ஊனுடம்பை ஒளியுடைய தாக்கினமையுரைப்பாராய், “ஊனைச் சிறந்தாளிர்வித்தது பாரீர்” என்றும் இயம்புகின்றார். ஊன் - ஊனாலாகிய உடம்பு. (24)
|