4611. உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநடம் ஜோதி. ஜோதி
உரை: உய்பிள்ளை பற்பலர் - உலகியல் துன்பத்தினின்றும் உய்தி பெற முயல்வோர் மிக்க பலராய். ஆவல் - ஆர்வத்துடன். ஏவல் செய்பிள்ளை யாக்கிற்று - தன் பணியைச் செய்பவனாக என்னை ஆட் கொண்டது. (27)
|