பக்கம் எண் :

4614.

     பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
          பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
     சீருறச் செய்தது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

          ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
          ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
          ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.

உரை:

     பேருலகு - பரந்து பெரிதாய இவ்வுலகத்தவர். மதித்தல் - பெரியவராகக் கருதிப் போற்றுதல். இராமலிங்கம்பிள்ளை என்று தம்மைப் பெயரிட்டழைத்தற் கேதுவாகிய திருவருளை வியந்து “தன் பிள்ளையென்று என்னைப் பெயரிட்டழைத்துச் சீருறச் செய்தது” என்று தெரிவிக்கின்றார்.

     (30)