4896. பொது விடிந்தது பொற்பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
உரை: பொற்பதம் - அழகிய திருவடிகள். முன்பாட்டில் இணையடி வாய்த்த என்றும், இப்பாட்டில் பொற்பதம் வாய்த்த என்றும் கூறியது திருவடிகளின் காட்சி அருமையை வற்புறுத்துகின்றன. வாய்த்த என்பது வாய்த்தன என்னும் பொருளில் அன்சாரியைத் தொக்க வந்தது. விடியற் காலையில் இறைவன் திருவடியைக் கண்டு தொழுது உள்ளம் மகிழ்ந்ததனால் விளைவு இது என்பாராய், “தூயவன் ஆனேன்” என்று சொல்லுகின்றார். (2)
|