பக்கம் எண் :

4900.

     திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
     பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
          பலித்தது பூசையென்று உந்தீபற.

உரை:

     இரவுக் காலத்தில் பரவும் இருள் நீங்கினமை பற்றி, “திரையற்று விட்டது” என்று கூறுகின்றார். பரை ஒளி என்பது திருவருள் ஞான ஒளி. யூமக்குத் திருவருள் ஞானம் எய்தினமை பற்றி, “பலித்தது பூசை” என்று பகர்கின்றார்.

     (6)