4901. உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற.
உரை: உள்ளத்தில் படிந்திருக்கும் மலவிருள், “உள்ளிருள்” என்றும், உள்ளத்தில் தோன்றி விளங்கும் அருள் ஞானத்தை, “உள்ளொளி” என்றும், அந்த ஞான இன்பத்தை தாம் பெற்றமை புலப்பட, “தெள்ளமுது உண்டேன்” என்றும் தெரிவிக்கின்றார். (7)
|