பக்கம் எண் :

491.

    மறிக்கும் வேற்கணார் மலக்குழி யாழ்ந்துழல்
        வன்றசை யறுமென்பைக்
    கறிக்கு நாயினுங் கடைநாய்க் குன்றிருக்
        கருணையு முண்டேயோ
    குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான்
        குதிரையைப் புடைத்தெங்கும்
    தெறிக்கு நல்வளஞ் செறிதிருத் தணிகையில்
        தேவர்கள் தொழுந்தேவே.

உரை:

     மேக மண்டலத்தைக் கடந்து அப்புறத்தே உயர்ந்து செல்லும் சிவந்த ஒளிக் கதிர்களை யுடைய சூரியன் ஊர்ந்து செல்லும் ஒற்றைச் சக்கரத்தைத் தொடும் சோலைகள் நிறைந்துள்ள தணிகைப் பதியில் தேவர்கள் திரண்டு வந்து தொழுகின்ற தேவனாகிய முருகப் பெருமானே, யாவரையும் கடிய பார்வையால் மயக்குகின்ற உயரிய ஆபரண மணிந்த மகளிரது வெவ்விய சிறுநீர் இழியும் தாரையாகிய அல்குலை விரும்பி அதற்குள் வீழ்ந்தாழும் எளியனாகிய எனக்கு உனது திருவருள் எய்துமோ? கூறுக, எ. று.

     கார் - மேக மண்டலம். முட்டுதல், ஈண்டுக் கடந்து உயரச் செல்லுதல் குறித்தது. அப்புறம் - வானத்தில் கருமுகிற் சூழலுக்கு மேலுள்ள பகுதி. சூரியனது ஒளிக்கதிர் செம்மை நிறமுடைமை பற்றிச் “செஞ்சுடர்க் கதிரவன்” என்கின்றார். சூரியன் ஊர்ந்து செல்லும் தேர், பச்சைக் குதிரை ஏழு பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேர் என்பர். சூரிய மண்டலத்தை அளாவி நிற்கும் உயர் மரங்கள் அடர்ந்த சோலை எனற்குக் “கதிரவன் இவர் ஆழித் தேரை யெட்டுறும் பொழில்” என்று இசைக்கின்றார். இளையர் முதியர் என்ற வேறுபாடின்றி யாவரையும் நோக்குவதால், “யாரையும்” எனவும் கூரிய பார்வையைச் செலுத்தி மயக்குமாறு புலப்படக் “கடுவிழியினால் மயக்குறும் ஏந்திழையவர்” எனவும் கூறுகின்றார். “இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளை” (போற்றி) என்பது திருவாசகம். கடுமை, ஈண்டுக் கூர்மை மேற்று; கூர்மை பொருளாக வரும் கடி யென்னும் உரிச்சொல் லடியாக இச்சொல் வந்த தென்க; கடி யென் கிளவி, “கடுத்தன ளல்லளோ அன்னை” என வந்தாற் போல வந்தது. கண் விழியாற் காமக் குறிப்புத் தோன்றி மயக்குவது இயல்பாதலால், “கடு விழியினால் மயக்குறும்” மகளிர் எனக் குறிக்கின்றார். ஏந்திழை என்ற விடத்து, ஏந்துதல், உயர்வு. மணிகள் வைத்து இழைக்கப் படுவது பற்றி, மகளிரணி, இழையெனப் படுகிறது. வெந்நீர் - வெப்ப முடைய சிறுநீர். தாரை - நீரொழுக்கு. பெண்மைச் சிறுநீர் உறுப்பை “வெந்நீர்த் தாரை” என இழிக்கின்றார். இதனைப் பிற் காலத்தார் அல்குல் எனவும், குஃறொடர்ந்த அன்மொழி யெனவும் வழங்குகின்றார்கள். இடைக்கும் முழந்தாளுக்கும் இடையிலுள்ள பகுதியையே அல்குலென்றனர் முன்னோர்; ஆண்கள் உடம்பின் அப்பகுதியை அல்குல் என்பது அந்நாளைய வழக்கு. “கொள்வீர் அல்குலோர் கோவணம்” (ஓத்தூர்) எனத் திருஞான சம்பந்தர் வழங்குவது காண்க. சிறு சிறு மணிகள் கோத்து முக்கோண வடிவில் அமைத்து உடைமேல் இடையிற் கட்டித் தொங்க விடும் மேகலையையும், அல்குல் என்பர். “பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்” (முருகு) என நக்கீரரும், “வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்” (பொருந) என முடத்தாமக் கண்ணியாரும் மொழிவது காணலாம். இன்னோரன்ன பிழைகள் சொல் வரலாறு காணும் பயிற்சியின்மையின் உளவாயின. மகளிர் காம மயக்கில் வீழ்ந்தார்க்குத் திருவருட்பேறு இல்லை என்றொரு கொள்கை வேறுவேறு சமயக் கொள்கைகளால் நாட்டிற் பரவி யிருந்தமையால், “ஆழ்ந்தவென் தனக்குன் அருளுண்டேயோ” எனக் கேட்கின்றார்.

     இதனால், மாய மகளிரின் மயக்கில் வீழ்ந்தார்க்குத் திருவருட் பேறு எய்தலரிது என்று தெரிவித்தவாறாம்.

     (2)