பக்கம் எண் :

4910.

     வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
          வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
     தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
          சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர்     அற்புதம்

உரை:

     வஞ்சம் புரியும் நெஞ்சினை யுடையவர் பலர் அருளின் அற்புதத்தைக் கண்டு தமது வாயால் ஒன்றும் சொல்லாமல் விலகிப் போய்ப் பின்னர் உண்மை தெளிந்து திரும்பி வந்து வாயிற் புறத்தே நிற்பாராயினர்; அவர்கள் பின்பு தமது வாயைத் திறந்து சாமியாகிய பெருமானே எமக்கு அருள் புரிக என்று வேண்டுவாராயினர்; இந் நிலையில் சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அன்பர்கள் வெற்றி கொண்டு விளங்கினர்.

     (6)