பக்கம் எண் :

47. இங்கிதப் பத்து

        அஃதாவது காமக் குறிப்புடைய இங்கிதச் சொல்லும் சொற்றொடரும் அமைய உரையாடுவதாகப் பாடும் பாட்டுக்கள் பன்னிரண்டு கொண்டது. சொல்வார் குறிப்பு வேறாகவும் கேட்போர் கருத்து வேறாகவும் பொதுவும் சிறப்புமாகிய சொற்களால் குறிப்புப் பொருள்படப் பேசுவதும் எழுதுவதும் இங்கிதம் எனப்படுகின்றன. இங்கிதம், குறிப்பு.

கலிநிலை வண்ணத்துறை

493.

    சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
    பேர்வளர் மகனார் சார்வளர் தணிகைப் பெருமானார்
    ஏர்வளர் மயின்மே லூர்வளர் நியமத் திடைவந்தால்
    வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயலம்மா.

உரை:

     அருமை வாய்ந்த திருமால் பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள் உலகுகளைக் கண்டு அவற்றிக்கு அப்பாலு முள்ள உலகுகளைக் காண்டற்கு உயர்ந்தது போன்ற முடிகள் சூழக் கொண்ட தணிகை மலையில் தேவர்கள் வந்து தொழும் தேவனாகிய முருகப் பெருமானே, அன்பு பொருந்திய வலிய மகளிரைப் பற்றி வருத்துகின்ற வஞ்சனை மிக்க கரிய பேயினும் பெரிய பேயாகிய எனக்கு உனது திருவருள் உண்டாகுமோ, அறியாது அஞ்சுகிறேன், எ. று.

     திருமாலுக்கு அருமை, எண்வகைத் திருவையும் தன்பால் உடைமை. ஒன்றின் மேல் ஒன்றாக இந்திரன் முதலியோர் உலகுகள் இருத்தலால், “மால் அயன் இந்திரன் முதலினோர் அமர் உலகு” எனவும், அவ்வவ் வுலகத்தவர் தம்மைக் காணவும், தாம் அவர்களைக் காணவும் உயர்ந்தமை புலப்பட, “உலகறிந் தப்பால் தெரிய ஓங்கிய சிகரி” எனவும் கூறுகின்றார். சிகரி, சிகர மென்றும் வழங்கும், தத்தம் காதலர்பால் மிக்க காம மிடல் கொண்ட மகளிரையே பேய்கள் பற்று மென்னும் உலகியல் வழக்குப் பற்றிப் “பிரியம் மேய வன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத்திடும் பேய்” என்றும், கோட் பட்டார்க்கும் அறியா வகையிற் பற்றிக் கோடல் தோன்ற, “வஞ்சப் பேய்” என்றும், இருள் போலத் தோன்று மென்னும் வழக்குப் பற்றிக் “கரிய பேய்” என்றும் இயம்புகின்றார். பேய் பற்றுவது போல் மகளிர் பால் ஆசை கொண்டலைவது விளங்கப் “பெரிய பேய்” என்றும் தம்மை இகழ்ந்துரைக்கின்றார். பேயினும் பெண்கள் பிறரை வருத்துவதிற் பெரியராகப் பெண்களைத் தாம் பற்றச் சேர்வதால், தம்மைப் “பெரிய பேய்” என்கின்றார் எனினும் பொருந்தும். “பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளலாகாதே” எனத் துறை மங்கலம் சிவப்பிராகாச சுவாமிகள் கூறின ரென்ப.

     இதனால், பேய் போல் மகளிரைப் பற்றித் திரியும் எனக்கு உன் திருவருட் பேறு எய்துமோ என விண்ணப்பித்தவாறாம்.

     (1)