பக்கம் எண் :

4946.

     சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
          சாமி அறிவார டி - அம்மா
          சாமி அறிவார டி.

     ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
          அற்புதக் காட்சிய டி - அம்மா
          அற்புதக் காட்சிய டி.

உரை:

     சன்னிதியில் பெருமானைத் தரிசித்துத் தான் பெற்ற அருள் ஞானப் பேற்றினைத் தான் அறிந்துரைக்கலாகாமையின், “சாமி அறிவாரடி” என்று உரைக்கின்றாள்.

     (33)