110. அருட் காட்சி
4947. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி
மயில்குயில் ஆச்சுத டி.
உரை: வானம் என்பது சிதாகாசம். மயிலாடக் கண்டேன் என்பது சிதாகாச ஞானக் காட்சி; சிவக் காட்சியுமாம். சிவத்தைக் கண்டு சத்தியைத் தரிசித்தமை விளங்க, “மயில் குயில் ஆச்சுதடி” என்று விளம்புகின்றாள். மயிலை விந்து என்றும், குயிலை நாதம் என்றும் கூறுவதுண்டு. (1)
|