பக்கம் எண் :

4948.

     துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
          வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
          வள்ளலைக் கண்டேன டி.

உரை:

     சிவாகாச நாத விந்து தத்துவ தரிசனங்களால் உவகை மிகுந்து எழும் பூரிப்பைக் கைவிட்டுச் சாந்தி நிலையை மேற்கொண்டு சிவபெருமானைத் தரிசித்தமை விளங்க, “துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் வள்ளலைக் கண்டேனடி” என்று சொல்லுகின்றாள்.

     (2)