111. பந்தாடல்
அஃதாவது, இளமகளிர் ஒன்று கூடிப் பந்தாடி மகிழும் விளையாட்டுப் பொருளாகப் பாரமார்த்திகப் பொருளை விளக்குதல்.
பல்லவி 4951. ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து.
உரை: ஆடடி பந்து எனற்பாலது ஆடு ஏடி பந்து என நின்றது. ஏடி என்பது தோழியை அழைக்கும் சொல். இதற்கு ஆண்பால் ஏடர். (1)
|