4965. இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணக வே
அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே
எனக்கும் உனக்கும்
உரை: தம்பம் நணுகவே, - தூண் ஒன்று பக்கத்தில் நெருங்கி நிற்கவே. இழைபோல் நுணக - நூலிழைபோல் மெல்லிதாக. திகைத்து நடுங்கும்போது - நூலின் இழை அறுந்து கீழே வீழ்வோமோ என்று உள்ளம் நடுங்கினபோது. அடிமையாக்கி - திருவடியை நினைந்தொழுகும் தன்மை யுடையவனாக்கி. (3)
|