113
113. அம்பலத் தரசே
அஃதாவது, இந்த நாமாவளி அம்பலத் தரசே என்று
தொடங்குவதால் இது அம்பலத் தரசே என்று வழங்குகிறது. இதன்கண் முதல் இரண்டு நாமாவளிகளும் அம்பலத்தரசே
என்னும் நாமாவளிக்குக் கணபதி முதலிய தெய்வங்களைக் காப்பாகக் கொள்வது முறை.
சிந்து
5064. சிவசிவ கஜமுக கணநா தா
சிவகண வந்தித குணநீ தா.
உரை: கஜமுக கணநாதன் - யானை முகத்தை யுடைய சிவகணங்களுக்குத் தலைவன். கண வந்திதன் - சிவ கணங்களால் வழிபடப் படுபவன். (1)
|