பக்கம் எண் :

5067.

          பொதுநடத் தரசே புண்ணிய னே
          புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.

உரை:

     பொது நடத்தரசு - ஞான சபையில் திருத்தம் செய்யும் அருளரசன். புலவர் - தேவர்கள். கண்ணியன் - சிறப்புடையவன்.

     (4)