பக்கம் எண் :

5074.

          அம்பர விம்ப சிதம்பர நாதா
          அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.

உரை:

     அம்பர விம்ப சிதம்பரம் - தேவருலகத்தின் ஒளி நிழலாக விளங்கும் சிதம்பரம். அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதன் - குதிகாலை ஊன்றி மேனோக்கி வைத்து ஆடுகின்ற அழகிய பாதத்தை உடையவன்.

     (11)