பக்கம் எண் :

5174.

     பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ
          பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித
     நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி
          நாதசிற்பர நம்பர அம்பர நாததற்பர விம்பசிதம்பர.

உரை:

     பார தத்துவ பஞ்சகர், பூலோக சம்பந்தமுடைய ஐவகைப் பஞ்ச கஞ்சங்களோடு பொருந்திய தலைவனே; திருவடிகளாகிய மெய்ம்மை பொருந்திய இயல்பான பாதத்தை உடையவனே; நெற்றியில் கண்களை நிலையாக யுடைய பெருமானே; பாசங்கள் எனப்படுகின்ற புதுமையான செயல்களைக் கண்டிப்பவனே; நாரத முனிவரால் சொல்லப்பட்ட சங்கித வித்தைக்கும் நாடகத்துக்கும் புதிய வித்தைகளைச் செய்தருளிய தலைவனே; நாத தத்துவமாகிய சிதம்பரத்தில் பராகாசமாய் விளங்குபவனே; அதற்கும் பராகாசமாய் ஒளிர்கின்ற சிதம்பரேசனே.

     (19)