பக்கம் எண் :

5177.

     எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம்
          இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம்
     தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம்
          சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.

உரை:

     எனது என்று சொல்லுதற்கும் நினது என்று சொல்லுதற்கும் இது என்று சொல்லுதற்கும் இதுவே தருணமாகும் ஒன்றாம்; பிறிதென நினைப்பது மேலாம்; அருட் செல்வம் என்பதும் மனம் என்பதும் உலகம் என்பதும் உன் திருவடிகளே ஆதலால் பதிப் பொருளே உனது சரணம் சரணம்.

     (22)