5180. சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே
கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.
உரை: தோன்றி மறைகின்ற சூதகம் தன்மையை யுடைய சந்திரனைத் தலையில் சூடுதல் எங்களுக்கு விந்தையாக இருக்கிறது; குற்றமில்லாத சிந்தையைக் கோயிலாகக் கொண்டவன் எந்தையாகிய நீ என்பதாம். (3)
|