பக்கம் எண் :

5184.

          பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே
          பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே.

உரை:

     பயன் உள்ளவற்றிலும் ஆன்மாக்களின் அம்பலத்திலும் பொன்னம்பலத்திலும் இருப்பவனே; ஞான பரத்திலும் ஞானாதீதமாகிய பரத்திலும் அதற்கப்பாலும் இருக்கின்ற திருக்கோயிலை உடையவனே.

     (7)