5217. வாசிவா சதாசிவ மஹாசிவா தயாசிவா
வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா.
உரை: சிவபெருமானே வருக; சதாசிவ மூர்த்தியே வருக; மகாசிவ மூர்த்தியே வந்தருளுக; தயாசிவ மூர்த்தியே வருக; வருக வருக என வேண்டியவாறாம். கேட்பது சிவபோகமாதலால் அதனைத் தருதல் வேண்டி, “வாசிவா வாசிவா வாசிவா” என்று வேண்டுகின்றார். (40)
|