பக்கம் எண் :

5219.

          சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
          தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
          சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
          தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.

உரை:

     சாக்கிய வேதம் தேக்கிய பாதம் - சாக்கிய வேதமாகிய பௌத்த சமயம் உண்மை காண முடியாமல் தேங்கி நின்ற பாதம். தாக்கிய ஏதம் போக்கிய பாதம் - உயிர்களைத் தாங்குகின்ற குற்றங்களைப் போக்குகின்ற பாதம். சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் - தளர்வுறச் செய்யப்பட்ட வாதிகளால் உருக்கொண்ட பாதம். தூக்கிய பாதம் - ஆட எடுத்திட்ட பாதம்.

     (2)