5227. புரையாத மணியே புகலாத நிலையே
புகையாத கனலே புதையாத பொருளே
நரையாத வரமே நடியாத நடமே
நடராஜ நிதியே நடராஜ நிதியே.
உரை: புரையாத மணி - உட்குடைவு இல்லாத மணி போல்பவனே. நரையாத வரமே - கெட்டொழியாத வரம் தருபவனே. நடியாத நடமே - உலகில் எவ்வுயிராலும் நடிக்க முடியாத நடராசனே. (2)
|