பக்கம் எண் :

5228.

     சிவஞான நிலையே சிவயோக நிறைவே
          சிவபோக உருவே சிவமான உணர்வே
     நவநீத மதியே நவநாத கதியே
          நடராஜ பதியே நடராஜ பதியே.

உரை:

     சிவஞான நிலை - சி்வஞான நிலையாவது சிவயோக நிலையாகுமாதலால், “சிவஞான நிலையே சிவயோக நிறைவே சிவபோக உருவே சிவமான உணர்வே” எனத் தெரிவிக்கின்றார். நவநாத கதியே - புதிய நெறியில் நவந்தரு பேதங்களை ஆக்குபவனே. நவநீதி மதி - புதிதான முறையில் நவந்தரு பேதத்தைச் சொல்லுகின்ற பெருமானே.

     (3)