பக்கம் எண் :

5229.

     தவயோக பலமே சிவஞான நிலமே
          தலையேறும் அணியே விலையேறு மணியே
     நவவார நடமே சுவகார புடமே
          நடராஜ பரமே நடராஜ பரமே.

உரை:

     தவயோக பலமே - தவத்தால் விளைகின்ற யோக பலனே. தலையேறும் அணியே - தலை உச்சியில் சூடும் அணி. நவவார நடமே - ஒன்பது துவாரங்களையுடைய உடம்பில் நடம் புரிபவனே. சுவகார புடமே - தனக்குத் தானே தூய்மை செய்பவனே.

     (4)