பக்கம் எண் :

5231.

     வயமான வரமே வியமான பரமே
          மனமோன நிலையே கனஞான மலையே
     நயமான உரையே நடுவான வரையே
          நடராஜ துரையே நடராஜ துரையே.

உரை:

     வியமான பரமே - விசாலமான பரம்பொருளே. மனமோன நிலையே - மனத்தால் உளதாக்கப்படும் மௌன நிலையே.

     (6)